AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எது? விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்

TNPSC Group 4: TNPSC குரூப் 4 தேர்வு மூலம் 6,574 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நவம்பர் 8-ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளதால், தகுதியுள்ளவர்கள் கடைசி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எது? விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்
டிஎன்பிஎஸ்சிImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Nov 2026 07:00 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 8-ம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காதவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்றே விண்ணப்பிக்கத் தயாராக வேண்டும். குரூப் 4 எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் கட்டண விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியம்.

Also Read: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.. 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்!

6,574 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப் 4) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், வரி வசூலிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்தத் தேர்வுக்கு கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 8-ம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, இன்னும் விண்ணப்பிக்காத தகுதியுள்ள தேர்வர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இன்றே அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in அல்லது tnpscexams.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். ஏற்கெனவே ஒருமுறைப் பதிவை (One Time Registration) முடித்தவர்கள் தங்களது உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். புதியவர்கள் முதலில் ஒருமுறைப் பதிவை முடித்த பின்னர் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி உள்ளிட்ட தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, தேர்வுக் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.. 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்!

தேர்வு நடைபெறும் தேதி

குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றைத் திருத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 9 முதல் நவம்பர் 11-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களது கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு மற்றும் கட்டண விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொண்டு விண்ணப்பிப்பது அவசியம்.

Follow Us