Tamil Nadu Weather Alert: தீபாவளி கொண்டாட்டம் பாதிக்குமா? அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu weather today : , தமிழ்நாட்டில் நவம்பர் 5, 2026 இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி நாள் நெருங்கும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 5 : தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 5, 2026 இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி (Diwali) நாள் நெருங்கும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி காணப்படுவதாகவும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கால் டாக்ஸி மீது மோதி விபத்தில் சிக்கிய போதை வாலிபர்கள்… தூக்கிவிடச் சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!




இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதன் ஒரு பகுதியாக நவம்பர் 5, 2026 இன்று தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 6, 2026 மற்றும் நவம்பர் 7, 2026 ஆகிய 2 நாட்கள் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நவம்பர் 8, 2026 அன்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு விவகாரம்.. உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!
சென்னையை பொறுத்தவரை நவம்பர் 5, 2026 இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.