AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டின் மாடியில் இருந்த தீபாவளி வெடிகள் வெடித்துச் சிதறி இளைஞர் பலி.. 3 பேர் படுகாயம்.. மதுரையில் பெரும் சோகம்!!

Madurai Fire Accident: மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீட்டின் மாடியில் பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீபாவளி வெடிகள் வெடித்துச் சிதறிய விபத்தில் கேட்டரிங் மாணவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் மாடியில் இருந்த தீபாவளி வெடிகள் வெடித்துச் சிதறி இளைஞர் பலி.. 3 பேர் படுகாயம்.. மதுரையில் பெரும் சோகம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Nov 2026 11:08 AM IST

மதுரை, நவ.05: பண்டிகைக் காலங்கள் என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உண்டு. ஆனால், சில நேரங்களில் ஏற்படும் சிறிய கவனக்குறைவுகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையிலான செயல்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிடும் சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காளக்குடி கிராமத்தில் தீபாவளிப் பண்டிகைக்காகச் சிவகாசியிலிருந்து வாங்கி வந்து வீட்டின் மாடியில் பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறிய கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படுகாயமடைந்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சாதிய பிடிவாதத்தின் கோர முகம்.. இருவீட்டார் சம்மதித்தும் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கிய கிராம நிர்வாகிகள்!!

வெடிகள் வெடித்து பயங்கர விபத்து:

கரும்காளக்குடி கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தனியார் கல்லூரியில் கேட்டரிங் தொழில்நுட்பப் படிப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காகச் சிவகாசியிலிருந்து ஏராளமான வெடிகளை வாங்கி வந்து, தங்களது வீட்டின் உள்ளே மாடியில் உள்ள லாப்ட் (Loft) பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சேகரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அந்த வெடிகளில் திடீரெனத் தீப்பற்றிப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த திடீர் விபத்தில் வாணி, லோகேஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தின் காரணமாக வீட்டின் ஒரு பகுதியும் பலத்த சேதமடைந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி இளைஞர் பலி:

வெடி விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், படுகாயமடைந்த மனோஜ் என்பவரின் உடல்நிலை மிகக் மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த மற்ற நபர்களுக்குத் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக ஆசையாக வாங்கி வந்த வெடிகளே அந்த இளைஞரின் உயிரைப் பறித்த சம்பவம் உறவினர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை.. சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. தமிழக அரசு அதிரடி ஏற்பாடு!!

காவல்துறையின் தீவிர விசாரணை:

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் உள்ளே உரிய பாதுகாப்பு முறைகளைக் கைக்கொள்ளாமல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வெடி மருந்துகளைப் பதுக்கி வைத்ததே விபத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதுடன், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வெடிகளைக் கையாளும்போது எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி வருகின்றனர்.

Follow Us