AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற புதிய கட்டுப்பாடுகள்.. கட்டாயமாக்கப்படும் 9 முக்கிய ஆவணங்கள்!!

Tamil Nadu agricultural land conversion rules: தமிழகத்தில் விவசாய நிலங்களை வீடுகள் மற்றும் இதர கட்டுமானப் பணிகளுக்காக மாற்றுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் கடுமையான விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இனிமேல் நிலத்தை மாற்ற 9 வகையான ஆவணங்களும் உரிய துறை அதிகாரிகளின் தடையில்லா சான்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற புதிய கட்டுப்பாடுகள்.. கட்டாயமாக்கப்படும் 9 முக்கிய ஆவணங்கள்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Nov 2026 11:35 AM IST

நவம்பர், 05: தமிழகத்தில் உணவு உற்பத்தியைப் பாதுகாக்கவும், விளைநிலங்கள் கண்மூடித்தனமாக வீட்டு மனைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்குத் தற்போது கடுமையான புதிய கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் எந்தவொரு விவசாய நிலத்திலும் வீடு கட்டுவதோ அல்லது இதர கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதோ முன்புபோல் எளிதான காரியமாக இருக்காது என்றும், பல்வேறு சட்டப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வீட்டின் மாடியில் இருந்த தீபாவளி வெடிகள் வெடித்துச் சிதறி இளைஞர் பலி.. 3 பேர் படுகாயம்.. மதுரையில் பெரும் சோகம்!!

கட்டாயமாக்கப்பட்டுள்ள 9 முக்கிய ஆவணங்கள்:

விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத வணிக அல்லது குடியிருப்புப் பயன்பாட்டிற்கு மாற்ற விரும்பும் நில உரிமையாளர்கள் இனி கட்டாயமாக 9 வகையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலத்திற்கான கிரயப் பத்திரம் அல்லது குத்தகைப் பத்திரம், நிலத்தின் பட்டா நகல், மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தின் சித்தா நகல் ஆகியவை முதன்மையாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவற்றுடன், அந்த நிலத்தில் உற்பத்தியாகும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வழிகளைத் தெளிவாகக் குறிக்கும் முறையான வரைபடம் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள அனைத்துக் கட்டிடங்களுக்குமான வரைபட விவரங்களையும் அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

பெறப்பட வேண்டிய தடையில்லா சான்றிதழ்:

நில ஆவணங்களைச் சமர்ப்பிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளிடமிருந்து உரிய தடையில்லா சான்றிதழ்களைப் (NOC) பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, வருவாய் கோட்டாட்சியர் (RDO), வேளாண்மைத் துறையின் இணை இயக்குநர் மற்றும் நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். அந்த நிலத்தைச் சுற்றியுள்ள நீர்வள ஆதாரங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே, துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாதிய பிடிவாதத்தின் கோர முகம்.. இருவீட்டார் சம்மதித்தும் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கிய கிராம நிர்வாகிகள்!!

முறைகேடுகளைத் தடுக்கும் அரசின் திட்டம்:

தொடர்ந்து அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மனைப் பிரிவு வணிகத்தால் பெருமளவு விவசாய நிலங்கள் அழிந்து வருவதைத் தடுக்கும் நோக்கில் அரசு கொண்டுவந்துள்ள இந்தத் திருத்தங்கள் பொதுமக்களிடையேயும் விவசாயிகளிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இனிமேல் விதிமுறைகளை மீறி விளைநிலங்களை மாற்ற முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதிச் சான்றிதழ்கள் இன்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானப் பணியும் அங்கீகரிக்கப்படாது என்றும் அரசு தரப்பில் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow Us