AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!

Vijay Sethupathi New Movie: தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருபவர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்த முன்னணி இயக்குனர்களின் படங்களில் இணைந்து நடித்துவருகிறார். இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இவர் புதிய திரைப்படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!
கிருத்திகா உதயநிதி மற்றும் விஜய் சேதுபதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 09 Jun 2026 10:36 AM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). கடந்த 2025ம் ஆண்டு இப்படம் வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. விஜய் சேதுபதியின் நடிப்பில் ஆண்டிற்கு ஒரு படமானாவது ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றியை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் தொடர்ந்து கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் மேல் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அதில் சமீபத்தில் இவரின் நடிப்பில் உருவான ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு படத்தின் (Slumdog : 33 Temple Road) டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளில் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் இயக்குநரும், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதியின் (Kiruthiga Udhayanidhi) இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஆக்ஷன் நாயகனாக விஜய் சேதுபதி.. வெளியானது ஸ்லம் டாக் பட டீசர்!

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி:

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் காதலிக்க நேரமில்லை என்ற படமானது வெளியாகியிருந்தது. இதில் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: பெண்ணியம் சார்ந்த படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்? ஹீரோயின் இவர்தான்!

இப்படத்தை தொடர்ந்து புது படத்திற்கான கதையை எழுத்தும் பணியில் இவர் இருந்துவந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு அந்த கதையை கூறியுள்ளாராம். இது விஜய் சேதுபதிக்கு பிடித்திருந்த நிலையில், இந்த கூட்டணி இணையவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

விஜய் சேதுபதி மற்றும் கிருத்திகா உதயநிதியின் கூட்டணி படம் பற்றி வைரலாகும் பதிவு:

விஜய் சேதுபதி தற்போது தமிழில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்ததாக வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், கிருத்திகா உதயநிதியின் இயக்கத்திலும் புது படத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலால் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us