AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhruv Vikram: ஆக்ஷன் மோட் ஆன்.. DV4 படத்திற்கான அப்டேட்டை வெளியிட்ட துருவ் விக்ரம்!

Dhruv Vikram DV04 Movie: பிரபல நடிகரின் மகனாகவும், தற்போது ஆக்ஷன் இளம் நாயகனாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் துருவ் விக்ரம். இவர் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் DV4 என்ற படத்தில் நடிக்கவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Dhruv Vikram: ஆக்ஷன் மோட் ஆன்.. DV4 படத்திற்கான அப்டேட்டை வெளியிட்ட துருவ் விக்ரம்!
துருவ் விக்ரம் DV04 திரைப்படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Jun 2026 21:35 PM IST

இளம் நடிகராக கோலிவுட் சினிமாவை கலக்கிவருபவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன் என அனைவருக்கும் தெரிந்ததே. இவரும் தனது தந்தையை போலவே தனது கடின உழைப்பின் மூலமாக ஹிட் படங்களை கொடுத்துவருகிறார். இவர் ஆதித்ய வர்மா (Adithya Varma) என்ற ரீமேக் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகியிருந்தாலும், இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் பிறகு வர்மா, மகான் (Mahaan) போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்படங்களில் இவரின் கதாபாத்திரம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் இவர் இறுதியாக நடித்திருந்த திரைப்படம்தான் பைசன் (Bison). கடந்த 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம், எதிர்பாராத வரவேற்பை பெற்றது. கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இவர் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் DV04 என்ற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இதை அவரும் உறுதிசெய்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் புரோமோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது துருவ் விக்ரம் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வசூலில் ரூபாய் 300 கோடிகளை நெருங்கும் பெத்தி படம் – பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ

DV04 திரைப்படம் பற்றி நடிகர் துருவ் விக்ரம் பகிர்ந்த போட்டோஷூட் குறித்த பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

துருவ் விக்ரமின் DV04 படத்தின் இயக்குநர் யார்?

துருவ் விக்ரம் தற்போது அதிரடி ஆக்ஷன் கதைகளை தேர்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். இறுதியாக வெளியான பைசன் படமானது விளையாட்டு கதையை மற்றும் உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது துருவ் நடித்துவரும் 4வது படமும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் கருப்பு மற்றும் சொர்க்கவாசல் போன்ற திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என் சம்பவகாரி நீதாண்டி.. கட்டா குஸ்தி 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு!!

DV04 பட புரோமோ அப்டேட்:

இந்நிலையில் கரண் அரவிந்த் குமார் துருவ் விக்ரமின் 4வது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கிறது, ஹீரோயின் யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் இப்படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவருகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என துருவ் விக்ரம் சமீபத்தில் நேரங்ல ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us