AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வசூலில் ரூபாய் 300 கோடிகளை நெருங்கும் பெத்தி படம் – பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ

Peddi Movie 4 Days Box Office Collection | நடிகர் ராம் சரண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் பெத்தி. இந்தப் படம் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

வசூலில் ரூபாய் 300 கோடிகளை நெருங்கும் பெத்தி படம் – பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ
பெத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2026 19:31 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு மொழி ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பெத்தி. இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இயக்குநர் புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கிய இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து இந்த பெத்தி படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் பெத்தி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விருத்தி சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வசூலில் ரூபாய் 300 கோடிகளை நெருங்கும் பெத்தி படம்:

அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி பெத்தி படம் திரையரங்குகளில் வெளியாகி 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில் உலகம் முழுவது மிந்தப் படம் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 292.5 கோடிகள் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நோ ரீ ஷூட்… பேட்ச் ஒர்க் ஒன்லி… வைரலாகும் ஜெயிலர் 2 குறித்த தகவல்

பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள் பதிவு:

Also Read… கருப்பன் வரான் வழி மறக்காதே… தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது கருப்பு – ப்ளாக் பஸ்டர் வெற்றியைக் கொண்டாடும் படக்குழு

Follow Us