AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் அருள் நிதியை இயக்கும் இயக்குநர் வசந்தபாலன் – வைரலாகும் தகவல்

Actor Arulnithi next movie with director Vasanthabalan | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகானக உள்ளவர் நடிகர் அருள் நிதி. இவர் அடுத்ததாக இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் அருள் நிதியை இயக்கும் இயக்குநர் வசந்தபாலன் – வைரலாகும் தகவல்
அருள் நிதி மற்றும் வசந்தபாலன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 21:32 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த பாலன் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஆல்பம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டாவதாக இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில். நடிகர்கள் பரத் மற்றும் பசுபதி நடிப்பில் வெளியான இந்தப் படம் தமிழ் சினிமாவில் பட்டி தொட்டி எங்கும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தின் மூலமாகதான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அடுத்தடுத்து அங்காடித்தெரு, அரவாண், காவியத் தலைவன், ஜெயில் மற்றும் அநீதி ஆகியப் படங்களை இயக்கி உள்ளார்.

நடிகர் அருள் நிதியை இயக்கும் இயக்குநர் வசந்தபாலன்:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவது மட்டும் இன்றி இணையதள தொடரையும் இயக்கி உள்ளார். அதன்படி ஜீ தமிழ் ஓடிடியில் வெளியான தலைமைச் செயலகம் என்ற தொடரையும் இயக்கி உள்ளார். இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இயக்குநர் வசந்த பாலன் அடுத்ததாக நடிகர் அருள் நிதியுடன் கூட்டணி வைத்து அவரது படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் இணையும் மிஷ்கின்.. அட இந்த படத்திலா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சேயோன் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு – வைரலாகும் தகவல்

Follow Us