AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேயோன் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு – வைரலாகும் தகவல்

Seyon Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அந்தப் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சேயோன் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு – வைரலாகும் தகவல்
சேயோன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 11:24 AM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பிறகு நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து மிகவும் சீரியசான கதையை மையமாக வைத்து உருவாகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மொழி திணிப்பை எதிர்த்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான பராசக்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த பராசக்தி படத்தை தொடர்ந்து எந்த இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தாய் கிழவி பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் இணைந்தார். அந்தப் படத்திற்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சேயோன் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு:

இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் முதல் பாடல் சுமார் 1500 நடனக் கலைஞர்களுடன் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்று வருவதாக தகவல்கள் முன்னதாக வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்தப் பாடலின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக சமூக வலைதள பக்கங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் சொன்ன வார்த்தை… முக்கிய முடிவு எடுத்த ஜன நாயகன் படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ராம் சரணின் பெத்தி படம் முதல் நாளில் மட்டும் இவ்வளவு வசூல் செய்ததா? உற்சாகத்தில் படக்குழு

Follow Us