10 ஆண்டுகளைக் கடந்தது இறைவி படம் – நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்
10 Years Of Iraivi Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான இறைவி படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவர் இயக்குநராக அறிமுகம் ஆனா பீட்சா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ரெட்ரோ என பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இறைவி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 03-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இறைவி படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.




இறைவி குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்:
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா ஆகியோர் நடிப்பில் உருவான இந்தப் படம் வாழ்க்கையில் பெண்களுக்கான நிலை எப்படி உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது. மேலும் பெண்கள் தங்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கிறார்கள் என்பதையும் இந்தப் படம் காட்டியிருக்கும். இந்தப் படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இறைவி — சில பெண்களின் கதை!! எனக்கும், இன்னும் பலருக்கும் இன்றும் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு திரைப்படம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Meenaakshi Chaudhary: அந்த நடிகருடன் நான் மூவி டேட் போவேன்.. மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!
கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
IRAIVI – Tale of few woMEN!!
A Film that’s still close to the heart of Mine & Many…. 🙏🏻🙏🏻❤️#10YearsofIraivi pic.twitter.com/6QvgnaAZkZ
— karthik subbaraj (@karthiksubbaraj) June 3, 2026