AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் ‘இரண்டு வானம்’ பட ரிலீஸ் எப்போது? வைரலாகும் பதிவு!

Irandu Vaanam Release Date: ராட்சசன் பட இயக்குநர் ராம் குமாரின் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள படம்தான் இரண்டு வானம். இப்படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் ‘இரண்டு வானம்’ பட ரிலீஸ் எப்போது? வைரலாகும் பதிவு!
இரண்டு வானம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Jun 2026 19:50 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam) மற்றும் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi2). இதில் ராட்சசன் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த, இயக்குநர் ராம் குமாரின் (Ram Kumar) இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இரண்டு வானம். இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த ஜோடி இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது. இந்த படம் வித்தியாசமான காதல், ஆக்ஷன் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதன் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவரும் நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் இதற்கு பின் உருவான கட்டா குஸ்தி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வையலாகிவருகிறது.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கின்போது அது சவாலாக இருந்தது – கியாரா அத்வானி!

இரண்டு வானம் பட ரிலீஸ் தேதி எப்போது இருக்கும் :

கட்டா குஸ்தி 2 படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகிவருகிறது. இதையடுத்து இரண்டு வானம் படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டுவருகிறதாம். ஆனால் இது குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தின் பூஜை போட்டோஸ்

இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வைரலாகும் பதிவு:

இரண்டு வானம் படமானது ஒரு மலை கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை மமிதா பைஜூ மிகவும் வித்த்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷாலும் நடித்துள்ள நிலையில், சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமித்துள்ள நிலையில், ஒரு பாடல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us