ராம் சரணின் கெரியர் பெஸ்டாக அமைந்ததா பெத்தி படம்? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ
Peddi Movie X Review Here | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ராம் சரணின் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தினை பார்த்த மக்கள் என்ன விமர்சனம் கொடுத்தார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் இன்று 04-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு பெத்தி என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தெலுங்கு மொழியில் இந்த பெத்தி படம் உருவாகி இருந்தாலும் தமிழ், மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் படம் வெளியாகி உள்ளது. இந்த பெத்தி படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா எழுதி இயக்கி உள்ளார். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்து உள்ளார். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து, போமன் இரானி, ரவி கிஷன், விஜி சந்திரசேகர், ராஜதவ தத்தா, சத்யா,ஜான் விஜய், அஜய் கோஷ், உபேந்திரா லிமாயே, ஆடுகளம் நரேன், தாரக் பொன்னப்பா, மகேஷ் அச்சந்தா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர்.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் இன்று படத்தைப் பார்த்த மக்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் என்ன கூறியுள்ளனர் என்று பார்க்கலாம்.




பெத்தி படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#OneWordReview…#Peddi: POWERFUL.
Rating: ⭐️⭐️⭐️½
A sports drama with its share of highs and lows… Its biggest strength is #RamCharan‘s memorable performance + several terrific moments… Screenplay could’ve been tighter and the runtime shorter. #PeddiReviewAfter making an… pic.twitter.com/h8dRfxbiIX
— taran adarsh (@taran_adarsh) June 4, 2026
பெத்தி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு விளையாட்டுத் திரைப்படம் இது. இதன் மிகப்பெரிய பலம். ராம் சரணின் மறக்க முடியாத நடிப்பும், பல அற்புதமான தருணங்களும் ஆகும். திரைக்கதை இன்னும் இறுக்கமாக அமைந்திருக்கலாம். படத்தின் கால அளவும் இன்னும் குறைவாக இருந்திருக்கலாம்.
பெத்தி படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Peddi A watchable commercial entertainer with an honest story that works in parts despite its regular template narration!
The first half is fairly average with template commercial elements, and Jahnvi’s track doesn’t work. However, the stretch from the pre-interval to the end…
— Venky Reviews (@venkyreviews) June 3, 2026
பெத்தி வழக்கமான பாணியிலான கதை சொல்லும் முறை அமைந்திருந்தாலும், சில இடங்களில் சிறப்பாகச் செயல்படும் ஒரு நேர்மையான கதையைக் கொண்ட, ரசிக்கத்தக்க ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படம் இது! படத்தின் முதல் பாதி, வழக்கமான வணிக அம்சங்களுடன் சராசரி நிலையிலேயே உள்ளது; மேலும், ஜான்வியின் கதாபாத்திரம் சார்ந்த பகுதி எதிர்பார்த்த அளவு ஈர்க்கவில்லை.
பெத்தி படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Peddi [#ABRatings – 3.5/5]
– A Well Packed commercial entertainer with package of all aspects 👌
– What the film excelled was it’s Emotional sequences which has worked well ♥️
– Ramcharan as performer carried so perfectly🌟
– ARRahman’s music was perfect fit in🎶
– Apart from… pic.twitter.com/kxlgxdE8YU— AmuthaBharathi (@CinemaWithAB) June 3, 2026
பெத்தி படத்திற்கு 3.5/5 கொடுக்கலாம். அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு கச்சிதமான வணிக பொழுதுபோக்குத் திரைப்படம். இப்படம் சிறந்து விளங்கியது அதன் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில்தான், அவை நன்றாக வேலை செய்தன. நடிகராக ராம்சரண் அதை மிகச் சரியாகக் கையாண்டார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.
பெத்தி படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Peddi – Power Packed Perf frm Ram Charan. Jhanvi cringe. Shivanna Neat. No Strong Villains. ARR’s Songs & BGM Supports. Gud Intention, Cliched Narration. Interval block & Climax r highlights. Emotional Approach works to an extend in this Partly Entertaining AVERAGE Sports Drama!
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 3, 2026
ராம் சரணின் அதிரடியான நடிப்பு. ஜான்வியின் நடிப்பு முகம் சுளிக்க வைக்கிறது. சிவண்ணாவின் நடிப்பு நேர்த்தியாக உள்ளது. வலுவான வில்லன்கள் இல்லை. ஏ.ஆர்.ஆரின் பாடல்களும் பின்னணி இசையும் துணைபுரிகின்றன. நல்ல நோக்கம், ஆனால் வழக்கமான கதைசொல்லல். இடைவேளைக் காட்சியும் உச்சக்கட்டமும் சிறப்பம்சங்கள். ஓரளவு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இந்தச் சராசரி விளையாட்டு நாடகத்தில், உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை ஓரளவிற்கு எடுபடுகிறது.
Also Read… Meenaakshi Chaudhary: அந்த நடிகருடன் நான் மூவி டேட் போவேன்.. மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!
பெத்தி படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Peddi is one rare film which has the structure of a template Telugu commercial film and yet shines with out of the box story and presentation. everything about this film is so so good. the introduction of hero, the music, dance numbers gives proper support to this grounded…
— Hero (@PsychoViswa) June 3, 2026
பெத்தி ஒரு வழக்கமான தெலுங்கு வணிகப் படத்தின் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், புதுமையான கதை மற்றும் படைப்பால் ஜொலிக்கும் ஒரு அரிய திரைப்படம். இந்தப் படத்தின் எல்லாமே மிக மிகச் சிறப்பாக இருக்கிறது. கதாநாயகனின் அறிமுகம், இசை, நடனக் காட்சிகள் ஆகியவை இந்த யதார்த்தமான கதைக்கு சரியான ஆதரவை அளிக்கின்றன. ராம் சரண் தனது அற்புதமான நடிப்பால் தனித்து நிற்கிறார். ரஹ்மான் சார் இந்தப் படத்திற்காக தன் இதயத்திலிருந்து இசையை வழங்கியுள்ளார். அப்பளசூரியாக ஜகபதி பாபுவின் நடிப்பு பிரமாதம். ஒட்டுமொத்தமாக, நல்ல கதை மற்றும் சிறந்த நடிப்பைக் கொண்ட ஒரு நல்ல விளையாட்டு சார்ந்த திரைப்படம் இது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.