AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெத்தி படத்திலிருந்து வெளியானது மஸ்ஸா மஸ்ஸா பாடலின் லிரிக்கள் வீடியோ

Massa Massa Lyrical Video Out Now | நடிகர் ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பெத்தி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து மஸ்ஸா மஸ்ஸா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ.

பெத்தி படத்திலிருந்து வெளியானது மஸ்ஸா மஸ்ஸா பாடலின் லிரிக்கள் வீடியோ
பெத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2026 16:52 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகன் தான் நடிகர் ராம் சரண். இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்திலேயே தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான மஹதீரா என்ற படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரண் எந்தப் படத்தில் நடித்தாலும் அது தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதியாக நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ராம் சரண் நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பெத்தி. இயக்குநர் புஜ்ஜி பாபு சணா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டு வருகின்றது.

பெத்தி படத்திலிருந்து வெளியானது மஸ்ஸா மஸ்ஸா பாடலின் லிரிக்கள் வீடியோ:

அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ள இந்த பெத்தி படம் வருகின்ற 4-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த பெத்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து தற்போது மஸ்ஸா மஸ்ஸா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகின்றது.

Also Read… ஆர்யாவின் அனந்தன் காடு படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இணையத்தில் வைரலாகும் பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Naslen: நிஜமாகவே கைவிடப்பட்டதா பிரேமலு 2 ? – நஸ்லேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

Follow Us