Naslen: நிஜமாகவே கைவிடப்பட்டதா பிரேமலு 2 ? – நஸ்லேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!
Naslen About Premalu 2: மலையாளம் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த படம்தான் ப்ரேமலு. இப்படத்தின் பாகம் 2 உருவாகுவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த படமானது கைவிடப்பட்டதா? அல்லது உருவாகுமா? என்பது குறித்து நடிகர் நஸ்லேன் விளக்கம்.
மலையாளம் சினிமாவில் இளம் நாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் நஸ்லேன் (Naslen). இவரின் நடிப்பில் தொடர்ந்து மலையாளத்தில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் லோகா (Lokah) என்ற படமானது வெளியானது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில், தன்னைவிடவும் வயது மூத்த நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்து சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் 2024ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பிரேமலு (Premalu). இதில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju)இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மூலமாகதான் மமிதா பைஜூ தமிழில் பிரபலமானார்.
இந்நிலையில் இப்படத்தின் பாகம் 2 (Premalu 2) உருவாகுவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவந்தது. மேலும் இப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி-யும் பிரேமலு 2 உருவாகும் என கூறிய நிலையில், அதற்கு பின் இப்படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நஸ்லேன் பிரேமலு 2 படம் உருவாகுமா? என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தின் பூஜை போட்டோஸ்
பிரேமலு 2 படம் உருவாகுமா என்பது குறித்து விளக்கமளித்த நடிகர் நஸ்லேன் :
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் நஸ்லேன், அதில் “பிரேமலு 2 படத்தின் திட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது, படத்தின் திரைக்கதை உருவக்கத்தின்போது, சில சிக்கல்கள் ஏற்பட்டது, அதையடுத்து படத்தின் கதையை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை. தற்போதைக்கு பிரேமலு 2 படம் உருவாக்கத்தை பற்றி படக்குழு எந்த முடிவையும் எடுக்கவில்லை” என அதில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் இரு மாஸ் கதாநாயகிகள் .. அட இவர்கள்தான்!
பிரேமலு பட இயக்குநரின் புதிய திரைப்படம் குறித்த பதிவு:
View this post on Instagram
பிரமேலு பட இயக்குநர் நடிகர் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பெத்தலகேம் குடும்ப யூனிட் என படக்குழு டைட்டில் விக்கப்பட்டுள்ளது. இப்படமானது ஒரு வித்தியாசமான குடும்ப கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இதன் ஷூட்டிங் 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கடந்த 2026 மே தொடக்கத்தில் முழுமையாக முடிந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படத்தை 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.