AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழகத்தின் எதிர்ப்புக் குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது!”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Aadhav Arjuna statement: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்குத் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழகத்தின் எதிர்ப்புக் குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது!”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jul 2026 09:57 AM IST

சென்னை, ஜூலை 22: தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி பிரியங்கா காந்தி ஆகியோர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது…. தவெக கடும் கண்டனம்

இந்தியாவே எதிரொலிக்கிறது:

டெல்லி சம்பவங்கள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ‘நீட் தேர்வு’ என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்குக் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் அந்த எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.”

ராகுல் காந்தி கைதுக்குக் கண்டனம்:

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் மீது அடக்குமுறை: “மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.”

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்: “டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பிரியங்கா காந்தி அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுக:

மத்திய அரசுக்குத் தனது கோரிக்கைகளை முன்வைத்த ஆதவ் அர்ஜுனா, நீட் விலக்குக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார். “மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க : மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.. நீட் தேர்வு நிலைபாடு இதுதான் – தவெக விளக்கம்..

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us