AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.10 கூடுதல் கட்டணம்.. டாஸ்மாக்கில் வருகிறது அதிரடி மாற்றம்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

Tasmac extra 10 rupees issue: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் வரும் ஜூலை 27ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கைகளால் முற்றிலும் ஒழிக்கப்படும் என மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் விளக்கம் அத்துள்ளார்.

ரூ.10 கூடுதல் கட்டணம்.. டாஸ்மாக்கில் வருகிறது அதிரடி மாற்றம்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!
அமைச்சர் விக்னேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jul 2026 07:49 AM IST

சென்னை, ஜூலை 22: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது குறைக்கப்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.  டாஸ்மாக் மதுக் கொள்முதல் மற்றும் இன்டென்ட் ஆர்டர்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருவது குறித்தும் டெட்ரா பேக் மது விற்பனை குறித்து எழும் சர்ச்சைகளுக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விரிவாகப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க: ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கை நீட்டிய வயர்மேன்.. கம்பி எண்ண வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் அதிரடி நடவடிக்கை!

ஜூலை 27-க்குப் பின் அதிரடி நடவடிக்கை:

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, அது கட்சி நிதிக்குச் சென்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போதும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் தொகை பெறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாகப் பல இடங்களில் பாட்டிலுக்கு வாங்கும் கூடுதல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில செய்தி ஊடகங்களிலேயே செய்தி வந்தது போல், தற்போது சில இடங்களில் ₹5 எனவும், சில கடைகளில் ₹3 ஆகவும் இந்த கூடுதல் கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த தவறான நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குப் பிறகு இந்த கூடுதல் கட்டண முறையை முற்றிலும் ஒழித்துத் தீர்ப்பதற்கான மிக முக்கிய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.”

டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்படுகிறதா?

டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்க அரசு ஆலோசித்து வருகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளிக்கையில், “தற்போது இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் வெளிப்புறமும் உட்புறமும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, கூட்ட நெரிசலுடன் காணப்படும் சூழலை நீங்கள் பார்க்கிறீர்கள். காலையிலேயே நூற்றுக்கணக்கான கரங்கள் நீண்டு மது பாட்டில்களை வாங்கச் சண்டையிடும் நடைமுறை நீடிக்கிறது. அங்குக் கண்ணியமான முறையில் நிற்பதற்குக்கூட இடம் இருப்பதில்லை.

இந்த அவலமான சூழலைப் பார்க்கும் பிற மாநிலத்தவர்கள் நம்மைத் தவறாக நினைக்கும் நிலை உள்ளது. இத்துறையில் உள்ள இந்த நடைமுறைகளைச் சீரமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசப்பட்ட பல கோணங்களில், இந்தத் தனியார்மயமாக்கல் பற்றிய உரையாடலும் ஒன்று. அதில் பேசப்பட்ட சில வார்த்தைகள் மட்டுமே வெளியாகி விவாதமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு

டெட்ரா பேக் மது விற்பனையில் உள்ள சிக்கல்கள்

மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் சிக்கலுக்குத் தீர்வாகக் கருதப்படும் டெட்ரா பேக் முறையைக் கொண்டு வருவதில் உள்ள தாமதம் குறித்துக் கேட்டதற்கு, கடந்த முறை டெட்ரா பேக் முறையைக் கொண்டுவர முயற்சி செய்தபோது, அது ஃப்ரூட்டி பாக்ஸ் போல மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என்றும், அது சிறு குழந்தைகள் மற்றும் மாணவர்களை எளிதில் கவரும் அபாயம் உள்ளது என்றும் பெரிய அளவிலான விமர்சனங்கள் எழுந்தன. எனவே, குழந்தைகளைக் கவராத வகையில் அதற்குரிய மாற்று வடிவமைப்பு மற்றும் வழிகளைக் கண்டறியும் பணியில் அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Follow Us