மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.. நீட் தேர்வு நிலைபாடு இதுதான் – தவெக விளக்கம்..
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வே அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக ‘நீட்டை நாங்களே நீக்குவோம்’ என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 21, 2026: நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு” என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்யக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து பேசினர். அதேபோல், திரைப் பிரபலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாடகர் அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்.
மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது:
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
கல்வியை மாநிலப்…
— TVK Party HQ (@TVKPartyHQ) July 21, 2026
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வே அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக ‘நீட்டை நாங்களே நீக்குவோம்’ என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை இடைக்காலத் தீர்வாக, ‘Special Concurrent List’ உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இதன் வாயிலாக கல்வி, மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
த.வெ.க நிலைபாடு என்ன?
இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நமது பார்வை. இதை நமது வெற்றித் தலைவர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
மற்றவர்களின் உழைப்புக்கும், சிந்தனைக்கும், போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும் தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.