AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு – அதிர்ச்சி தகவல்

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் உலக பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு  – அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Jul 2026 10:55 AM IST

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் உலக பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

அதன் படி ஜூலை 22, 2026 இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, 13, 430 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் ஒரு சவரன், அதாவது 8 கிராமுக்கு 1, 680 ரூபாய் அதிகரித்து, 1,0 7, 440 ரூபாயாக உயர்ந்துள்ளது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 14, 651 ரூபாயாகவும், ஒரு சவரன் 1, 17, 208 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Gold Price : ரூ.9,000 சரிவை சந்தித்த தங்கம்.. தற்போது முதலீடு செய்வது சரியானதா?

வெள்ளி விலை நிலவரம்

இதற்கிடையில், வெள்ளி விலையும் உயர்வை பதிவு செய்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து, 245 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி 2, 45,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வரும் நிலையில், இன்று மீண்டும் இரண்டின் விலையும் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதுமட்டுமின்றி, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதமும் தங்கத்தின் விலையில் முக்கியப் பங்காற்றும். தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தனது அடுத்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க : எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் ஏன் காப்பீட்டு தொகை அதிகம்? காரணம் இதுதான்!

வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைக் கடந்தது. அப்போது ஒரு பவுன் தங்க நகை ரூ. 1,01,600-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று காலை, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 1,31,160 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அடுத்தடுத்த மாதங்களில் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், அதன் விலை இன்னும் ரூ. 1 லட்சத்திற்குக் கீழே செல்லவில்லை. தங்கத்தின் விலையில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கங்கள் சாமானிய மக்களையும் நகைப்பிரியர்களையும் கவலையடையச் செய்துள்ளன.

Follow Us