Gold Price : அதிரடி உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி.. ரூ.5,000 உயர்ந்த வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price Hiked | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஜூலை 21, 2026) உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜுலை 21 : ஈரான் போர் (Iran War) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூலை மாதத்தில் தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 21, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்
2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. காரணம், தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்தது. 2026 ஆம் ஆண்டும் தொடக்கத்தில் அத்தகைய சூழலை தான் கொண்டு இருந்தது. ஆனால், ஈரான் போர் உள்ளிட்டவற்றின் காரணமாக நிலமை தலைகீழாக மாற தொடங்கியது. அதாவது ஜனவரி மாதம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், ஜூன் மாதத்தில் தொடர் சரிவை சந்தித்து தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் தங்கம் விலை தொடர் சரிவை எதிர்க்கொண்ட நிலையில், ஜூலை மாதத்தில் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : மானியம் வழங்குவதில் சிக்கல்? எல்பிஜி சிலிண்டர் விலை உயருமா?
அதிரடி உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி
சென்னையில் இன்று (ஜூலை 21, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.