AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பூரில் சோகம்… லாரி மோதி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!

Tirupur Road Accident Couple Died: திருப்பூர் மாவட்டத்தில் ஸ்கூட்டர் மீது கனரக லாரி மோதிய விபத்தில் கணவன் மற்றும் மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் சோகம்… லாரி மோதி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!
திருப்பூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Jul 2026 17:00 PM IST

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ( 55 வயது). இவரது மனைவி பேபி ( 47 வயது). இவர்கள் இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூலை 21- ஆம் தேதி) தங்களது கூட்டில் காங்கேயம் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை அண்ணாமலை ஓட்டி சென்றார். அப்போது, அவர்களுக்கு பின்னால் ஒரு கனரக லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த அண்ணாமலையின் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அண்ணாமலை மற்றும் அவரது மனைவி பேபி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், தம்பதி இருவரும் உடல் நசுங்கி ரத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

லாரி மோதியதில் உடல் நசுங்கி தம்பதி பலி

இது தொடர்பாக காங்கேயம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்ந்து, இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: சினிமா பாணியில் கடத்தல் .. சாதுர்யமாக காய்நகர்த்திய தொழிலதிபர்.. கும்பலை தட்டித்தூக்கிய போலீஸ்!

காங்கேயம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அண்ணாமலையின் உறவினர்கள் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு லாரியின் ஓட்டுநர் தப்பி சென்றதாக தெரிகிறது. இதனால், ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தம்பதி  உயிரிழப்பால் சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்

திருப்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த பகுதி நெடுஞ்சாலை என்பதால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே, போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு

Follow Us