உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி விசிட் கன்பார்ம்.. ஜூலை 25-இல் மாஸ் எண்ட்ரி.. ஐஆர்பிஎன் படைக்கு ஜனாதிபதி விருது வழங்குகிறார்!
Union Home Minister Amit Shah Puducherry Visit: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூலை 25- ஆம் தேதி புதுச்சேரி வருகை தருவது உறுதியாகி உள்ளது. அங்கு நடைபெற்று ஐஆர்பிஎன் காவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜனாதிபதி விருதை வழங்குகிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஐ. ஆர். பி .என் ( இந்திய ரிசர்வ் பட்டாலியன் காவல் படை) செயல்பட்டு வருகிறது. இந்தப் படையின் 2-ஆவது இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை தொடக்க விழா மற்றும் இந்த படைக்கு அண்மையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவரின் பிரசிடென்ஸ் வண்ண விருது ஆகியவை வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற ஜூலை 25- ஆம் தேதி ( சனிக்கிழமை) புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் கோரிமேடு மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை காவல் கண்காணிப்பாளர்கள் நல்லாம் கிருஷ்ணராய பாபு, ரங்கநாதன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பாபு, செந்தில்குமார் ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
அமைச்சரின் வருகையையொட்டி, ராஜீவ் காந்தி சிலை பகுதி முதல் கிழக்கு கடற்கரை சாலை விமான நிலையம் சந்திப்பு வரை சாலையில் ஆங்காங்கே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற ஜூலை 18 அல்லது 25- ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, மத்திய உள்துறை அமைச்சரின் வருகை ஜூலை 25 என்று மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக புதுச்சேரி அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: 2 மாதங்களில் 10 பேர் கைது… ஆணவத்துக்கு பாடம் புகட்டுவார்கள் – மு.க.ஸ்டாலின் கண்டனம்




உள்துறை அமைச்சரின் வருகை உறுதியானது
புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைகிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் அல்லது சாலை வழியாக கார் மூலம் புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரியில் இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில் தமிழகம் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் வருகிறாரா உள்துறை அமைச்சர் அமித் ஷா
தமிழகத்தில் ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அத்துடன், பாஜகவை வலுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தன. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் பட்சத்தில் பாஜகவின் தலைவர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..