2 மாதங்களில் 10 பேர் கைது… ஆணவத்துக்கு பாடம் புகட்டுவார்கள் – மு.க.ஸ்டாலின் கண்டனம்
விளாத்திக்குளம் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் , ''ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஜூலை 21 : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயனை போலீசார் அவரது இல்லத்தில் வைத்து ஜூலை 21, 2026 அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ அதிரடி கைது
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மேடையில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும் விதமாகவும் சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், “ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர்” என்றும் அவர் அந்த மேடையில் விமர்சித்திருந்தார்.
இதையும் படிக்க : தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து? வைரலாகும் போட்டோவால் வலுக்கும் சர்ச்சை




இதனையடுத்து அவர் மீது தவெகவின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ஜூலை 20, 2026 இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்த 2 மாதங்களில் அவதூறு வழக்குகளில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக தி இந்து நாளிதழ் தலையங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தி இந்து நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
இதையும் படிக்க : பெரம்பூரில் தவெக இணையதளம் முடக்கம்? காரணம் என்ன? தவெக விளக்கம்
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அவர் தனது பதிவில் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.