பெரம்பூரில் தவெக இணையதளம் முடக்கம்? காரணம் என்ன? தவெக விளக்கம்
பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க உருவாக்கப்பட்ட பிரத்தேக இணையதளத்தில் பதிவு செய்யும் புகார்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தவெகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.அதிக அளவில் புகார்கள் வருவதால், இணையதளம் முடங்கியுள்ளது. புகார் மனுக்களின் தீர்வு குறித்த தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
சென்னை, ஜூலை 21 : பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க உருவாக்கப்பட்ட பிரத்தேக இணையதளத்தில் பதிவு செய்யும் புகார்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தவெகவினர் விளக்கம் அளித்துள்ளனர். தவெக இணையதளதம் முடங்கியதாக தகவல் வெளியானது. மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க இயலவில்லை என விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தவெக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் தொடங்கப்பட்ட இணையதளத்தில் அத்தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளில் இருக்கும் புகார்களை தெரிவிக்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டது.
பெரம்பூரில் தவெக இணையதளம் முடக்கம்?
இந்த நிலையில், தமிழக முழுவதுமிருந்து தங்களது தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை இதில் பதிவு செய்து வருகின்றனர். எனினும், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அதிக அளவில் புகார்கள் வருவதால், இணையதளம் முடங்கியுள்ளது. புகார் மனுக்களின் தீர்வு குறித்த தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
இதையும் படிக்க : திமுகவில் பெரும் அதிர்ச்சி.. எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு? ஆகஸ்ட் 3 வரை நீதிமன்ற காவல்!




கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்த அவர், பெரம்பூர் தொகுதியை மட்டும் தக்க வைத்துக்கொண்டார். இதனையடுத்து முதல்வரின் தொகுதி என்பதால் பெரம்பூர் சிறப்பு கவனம் பெற்றது.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை கடந்த ஜூலை 13, 2026 அன்பு திறந்துவைத்தார். மேலும் தனது தொகுதி மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில், tvkcm.com என்ற பிரத்யேக இணையதளத்தையும் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புகார்கள் நேரடியாக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தவெக இணையதளதம் முடங்கியுள்ளதாகவும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க இயலவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தவெக தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பெரம்பூர் தொடங்கப்பட்ட இணையதளத்தில் அத்தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளில் இருக்கும் புகார்களை தெரிவிக்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டது.
இதையும் படிக்க : ரூ. 5,000 லஞ்சத்தை திரும்ப வாங்கிக்குங்க சார்!.. கதறிய ஏட்டு.. சிக்கிய எஸ்.ஐ.. பொள்ளாச்சியில் சம்பவம்!
ஆனால், தமிழகம் முழுவதுமிருந்து தங்களது தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை இதில் பதிவு செய்து வருகின்றனர். எனினும், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அதிக அளவில் புகார்கள் வருவதால், இணையதளம் முடங்கியுள்ளது. புகார் மனுக்களின் தீர்வு குறித்த தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பூர் தொகுதி மக்கள் மட்டும் புகார்களை பதிவு செய்யும் வகையில் இணையத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பதிவாகும் புகார்கள் மற்றும் அதில் தீர்வுகாணப்பட்டவை குறித்த தகவல்கள் சரியாக பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.