உங்கள் தகவல் ரகசியமாக… மக்கள் தொகை கணக்கெடுப்பு – மக்களுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீடுகள் குறித்து கணக்கெடுப்பு ஜூலை 17, 2026 இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் எல்லோரும் சேர்ந்து இதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என மக்களுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீடுகள் குறித்து கணக்கெடுப்பு ஜூலை 17, 2026 இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் எல்லோரும் சேர்ந்து இதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என மக்களுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி ஜூலை 17, 2026 தொடங்கியுள்ளது.
மக்களுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை
மேலும் ஜூலை 17, 2026 முதல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு மக்கள் தொகை ‘சுய கணக்கெடுப்பு நடைபெறுகிறது. se.census.gov.in இணையதளம் மூலம் பொதுமக்களே சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர் ரமேஷ் – உற்சாக வரவேற்பு
முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே,… pic.twitter.com/fvA6pX24Jq
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 17, 2026
இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்! என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : 2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!
இந்தியாவில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இது சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்படும் 8வது கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்த அறிவிப்பை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.