AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் விசிட்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!

CM Vijay Inspection Samooga Neethi Viduthi : சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதியில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த விடுதியில் கட்டப்பட்ட 10 மாடிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் விசிட்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
சமூக நீதி விடுதியில் முதல்வர் திடீர் ஆய்வு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 17 Jul 2026 17:44 PM IST

சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.சி. ராஜா சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியானது கடந்த திமுக ஆட்சியில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த விடுதியில் உள்ள சுமார் 10 கட்டடத்தை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சமூகநீதி விடுதியில் தங்கி உள்ள மாணவர்களின் குறைகளை முதல்வர் விஜய் கேட்டறிந்தார். இந்த ஆய்வானது சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்https://www.tv9tamilnews.com/tamil-nadu/55-varieties-of-premium-liquor-are-set-to-be-introduced-at-tamil-nadu-tasmac-outlets-91455.html ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில், சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட சமூக நீதி விடுதி

சமூக நீதி துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த சமூக நீதி விடுதியானது கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட இந்த சமூக நீதி விடுதியானது கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் புதிய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்திருந்தார். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கடந்த 2025- ஆம் ஆண்டு புதிய சமூக நீதி விடுதி கட்டடத்தை முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.

மேலும் படிக்க: குரூப் 1 முதன்மை தேர்வு தேதியில் மாற்றம்.. செப். 27ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு..

சமூகநீதி விடுதி உணவு தரம் குறித்து உத்தரவு

இந்த நிலையில், இந்த சமூகநீதி விடுதி கட்டடங்கள் மற்றும் அந்த விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வரும் மாணவர்களிடம் குறைகள் ஆகிவற்றை முதல்வர் விஜய் ஆய்வு செய்து கேட்டறிந்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமூக நீதி துறை ஆலோசனை கூட்டத்தில் இந்த விடுதிகளில் தங்கி இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். இதேபோல, சமூகநீதி விடுதிகளில் பயிலும் மாணவர்களின் உணவுப்படியை உயர்த்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருந்தது.

உணவை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்

தமிழகத்தில் செயல்படும் சில சமூக நீதி விடுதிகளில் உணவின் தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில், இந்த உணவு புகைப்படம் எடுத்து துறையின் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய் எம். சி. ராஜா சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Follow Us