AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர் ரமேஷ் – உற்சாக வரவேற்பு

ஆனி வார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி புது வரவு செலவு கணக்கு ஜூலை 17, 2026 இன்று துவங்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக பட்டு வஸ்திரங்கள், மங்களப் பொருட்கள் ஆகியவை தமிழ்நாடு சார்பாக அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர் ரமேஷ் – உற்சாக வரவேற்பு
திருப்பதியில் அமைச்சர் ரமேஷ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Jul 2026 16:51 PM IST

ஆனி வார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி புது வரவு செலவு கணக்கு ஜூலை 17, 2026 இன்று துவங்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மங்களப் பொருட்கள் ஆகியவை தமிழ்நாடு சார்பாக அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இரு புகழ்பெற்ற வைணவ தலங்களுக்கு இடையிலான ஆன்மிக பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாரம்பரிய வழக்கம் கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் ரமேஷிற்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருப்பதிக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர்

 

இதையும் படிக்க : முரண்படும் விசிக தலைவர்கள்.. ஆதிதிராவிடர் துறை பெயர் மாற்றத்தை எதிர்க்கும் திருமாவளவன்.. ஆதரிக்கும் அமைச்சர் வன்னி அரசு! பின்னணி என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகத் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்த நில ஆக்கிரமிப்பு மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் நெருங்கிய உறவினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளங்களும் குற்றம் சாட்டி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை புகார்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் ரமேஷ், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தனது அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார்.

இதையும் படிக்க : விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளை அமைச்சர் ரமேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “கோயில் நிலத்தைப் பட்டா போட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டதாகச் சிலர் டிசைன் டிசைனாக, கலர் கலராகப் பொய் சொல்லி ரீல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலத்தை வாங்கிய நபர் என்னுடைய உறவினர் என்று கூறுகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்குப் புதிய உறவினர்களைப் புதுசு புதுசாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Follow Us