திருச்செந்தூரில் அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் தரிசனம் மேற்கொள்ள பணம் பெற்ற விவகாரத்தில் அர்ச்சகருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி மே, 29 : திருச்செந்ததூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மே 29, 2026 அன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூர் கோவில் சாமி தரிசனம் செய்ய பணம் கேட்டதாக அர்ச்சகரிடம் விசாரணை மேற்கொண்டார். அவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்ட அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர் மன்னிப்புக்கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் கூடுதல் பணம் பெற்ற விவகாரத்தில் காவலாளிகள், முடிதிருத்தும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அர்ச்சகரிடம் மட்டும் மன்னிப்புக் கடிதம் வாங்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
திருச்செந்தூரில் அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன்?
முன்னதாக அமைச்சரிடம் தரிசனத்துக்கு பணம் பெற்ற விவகாரத்தில் திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அமைச்சர் ரமேஷ் மறுத்தார். பின்னர் பேசிய அவர், திருச்செந்தூரில் தரிசனத்திற்கு பணம் பெற்ற விவகாரத்தில் சிக்கிய காவலாளிகள், முடி திருத்தும் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் என்பதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அர்ச்சகர் கோவில் பணியாளர் இல்லை. அவர் தன்னார்வலர் இல்லை என்பதால் அவர் கோவிலில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க : அதிமுகவின் கூடாரம் காலியாகிறதா? முன்னாள் எம்.பி. இளவசன் எடுத்த திடீர் முடிவு!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்ய இந்து அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மே 29, 2026 அன்று சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய ஐயப்பன் என்பவர் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் தரப்பில் யுபிஐ மூலம் அர்ச்சகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னரே அர்ச்சகருக்கு அவர் அமைச்சர் ரமேஷ் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அர்ச்சகரிடம் அமைச்சர் ரமேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : பள்ளிக் கட்டண விவகாரத்தில் அதிரடி உத்தரவு: தனியார் பள்ளிகள் இதை செய்தே ஆகணும்..!
இதனையடுத்து அவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கப்பட்டது. மேலும், அவருக்கு உதவியதாக கோவில் காவலாளி கருப்பசாமி மற்றும் கோவிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் பெற்றதாக மேலும் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முடிதிருத்தும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அர்ச்சகரிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் கேட்கப்பட்டதாக பலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் தான் அர்ச்சகருக்கு கோவிலில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

