Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் பிரசித்தி’.. 1300 ஆண்டுகள் பழமையான அதிசய கோவில்!!

ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சன்னதியில் தரிசனம் செய்து, நோயிலிருந்து விடுபட வேண்டி விரதமும், சிறப்பு பூஜைகளும் மேற்கொள்கிறார்கள். 1300 ஆண்டுகள் கடந்து இன்னும் அமைதியாக நிற்கும் இந்த கோவில், ஆன்மீக நம்பிக்கைக்கும், பாரம்பரிய சிகிச்சை நம்பிக்கைக்கும் சிறந்த சான்றாக திகழ்கிறது.

‘சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் பிரசித்தி’.. 1300 ஆண்டுகள் பழமையான அதிசய கோவில்!!
வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Nov 2025 15:11 PM IST

திருவாரூர், நவம்பர் 23: நவீன மருத்துவமும், மேம்பட்ட சிகிச்சைகளும் உருவாகும் முன், மக்கள் தங்கள் நோய்களுக்கான நிவாரணத்தை நம்பிக்கையிலும், வழிபாட்டிலும் தேடினர். பல கோவில்கள் குழந்தை பாக்கியம் தருவதாகவும், நோய்களிலிருந்து காக்கும் தலங்களாகவும் கருதப்பட்டன. இவ்வாறு ஆன்மீக நம்பிக்கைகள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கொள்ளாவிட்டாலும், மனத்துணிவு, அமைதி, நம்பிக்கை போன்றவற்றை அளிப்பதாக மக்கள் உணர்ந்தனர். அந்தவகையில், தென்னிந்தியாவில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்று, அதன் ஆன்மிக சக்தியும் மருத்துவ அதிசயங்களும் காரணமாக பக்தர்களிடம் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால் நலம் கிடைக்கும் என்பதே நூற்றாண்டுகளாக பரவி வரும் நம்பிக்கை.

Also Read : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில்:

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில் வெண்ணி கிராமத்தில், அமைந்துள்ள வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில் பக்தர்களுக்கு ஒரு தனிப்பட்ட நம்பிக்கையின் தலமாக உள்ளது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 26 கி.மீ தூரத்தில், திருவாரூரிலிருந்து 34 கிமீ தூரத்தில் இருக்கும் இந்த 1300 ஆண்டு பழமையான சிவாலயம் இன்றும் பக்தர்களால் ‘நீரிழிவு குணமாகும் தலம்’ என்று நம்பப்படுகிறது.

இன்றைய இந்தியாவில் அதிகமாகப் பரவும் நோய்களில் சர்க்கரை (சுகர்) முக்கியமானது. உடலில் இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நாளடைவில் கண்கள், சிறுநீரகம், நரம்புகள், இதயம் போன்றவை சேதமடையலாம். இதற்கு, மருந்துகள், இன்சுலின் ஊசிகள், இரத்த சர்க்கரை கண்காணிப்பு போன்றவை அவசியமாக இருந்தாலும், இந்த நோய் முழுமையாக குணமாகும் நோயாக கருதப்படவில்லை.

நீரிழிவு நோய் குறையும்:

இந்த நிஜத்துக்கு நடுவில், நம்பிக்கையும் மக்கள் வாழ்க்கையில் தன் இடத்தை இழக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில் இன்றும் அந்த நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது. இங்கு சிவபெருமான் “கரும்பேஸ்வரர்” என்ற பெயரில் கரும்புடன் இணைக்கப்பட்ட வடிவில் வழிபடப்படுகிறார். இந்த தலத்தில் வேண்டுதல் வைத்தால் நீரிழிவு குறையும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.

கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் கரும்புகளால் அலங்கரிக்கப்படுவது தான். அதோடு, பால், தயிர், தேன் போன்றவற்றுடன் கரும்புச் சாறு அபிஷேகமும் இங்கு செய்யப்படும். நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இந்த தலத்திற்குச் சென்று வேண்டுதல் வைத்து நிம்மதியை நாடுகின்றனர். பல ஆண்டுகளாக, கோவிலில் வழிபட்ட பிறகு இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்து, மருந்து அளவை குறைத்தது போன்ற அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுவே இந்த தலத்தின் மீது உள்ள நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியுள்ளது.

சிவபெருமானுக்கு இனிப்பு:

பாதுகாப்புக்காக இனிப்பு தவிர்க்க வேண்டும் என்ற மருத்துவர் அறிவுறுத்தலுக்குப் போட்டியாக, இங்கு பக்தர்கள் சிவபெருமானுக்கு இனிப்பு பொங்கல், சர்க்கரை போன்றவற்றை சமர்ப்பிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இது தங்களின் ஆசைகள், நோயின் வேதனை என்ற அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், அனைவரும் இதை நம்புவதில்லை. சிலர், நீரிழிவு கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றம், தொடர்ந்த மருத்துவ பரிசோதனை, மருந்து ஆகியவை தவிர வேறு தீர்வு இல்லை என்பார்கள். எந்தவொரு வழிபாடும் மருத்துவத்தை மாற்றாது என்பதும் உண்மை.

Also Read : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!

பலருக்கு, அறிவியலும் ஆன்மீகமும் சேர்ந்த சமநிலைதான் சிறந்த தீர்வு. ஆரோக்கியமான உணவு, மருத்துவர் ஆலோசனை, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் மனநிறைவு தரும் ஆன்மீக நம்பிக்கை சேரும்போது, வாழ்க்கை மேலும் எளிதாகும். அதற்கான அடையாளமாகவே வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில் இன்றும் நம்பிக்கையையும் நிம்மதியையும் வழங்கும் தலமாக திகழ்கிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. எந்த விளைவுகளுக்கும் Tv9tamil பொறுப்பாகாது)