உங்கள் இரத்தக்குழாய்கள் ஆரோக்கியமாக இருக்க, ரத்த அழுத்தத்தை இயற்கையாகக் குறைக்க, ஒரு எளிய பானம் உதவும் என பிரபல டாக்டர் எரிக் பெர்க் தெரிவிக்கிறார். அவரது கூற்றுப்படி, தினமும் ஒரு கப் கோகோ பவுடர் கலந்து, பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், இதய ஆரோக்கியம் மேம்படும், ரத்த அழுத்தம் குறையும், இரத்த ஓட்டம் சிறப்பாகும் என்கிறார். மேலும் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற அபாயங்கள் குறையும். நமது இரத்தக்குழாய்களின் உள் பரப்பான, என்டோதீலியம் சேதமடைந்தால், உடலின் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறைகிறது.