வெளிநாட்டு தொழிலாளர்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை பல ஆண்டுகளாக முன்னெடுத்த டிரம்ப்… இப்போது திறமையுள்ள தொழிலாளர்கள் குடியேற எச்ஒன்பி விசாவிற்கும் திறந்த ஆதரவு தெரிவித்துள்ளார். வாஷிங்டன் டிசியில் நடந்த அமெரிக்க, சவுதி அரேபியா முதலீடு தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், பில்லியன் டாலர் செலவில் சிப் ஃபேக்டரிகளை உருவாக்குவது எளிது. ஆனால், அதற்கு திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை. அவர்களை வரவேற்கிறேன், என்றார். மேலும் பேசிய டிரம்ப், அமெரிக்கர்களுக்கு சில முக்கியமான திறன்கள் இல்லை.