இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஹலாலி அணையிலிருந்து புறப்பட்ட யூரேசிய கிரிஃபோன் கழுகு `மாரிச்', 15,000 கிலோ மீட்டர் பயணத்தை முடித்துவிட்டு பாதுகாப்பாக இந்தியா திரும்பியதாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தப் பறவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் வழியாகப் பயணித்து, இப்போது ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் சுற்றித் திரிவதாக விதிஷாவின் பிரதேச வன அதிகாரி ஹேமந்த் யாதவ் பிடிஐயிடம் தெரிவித்தார். E