கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி, 7 கோடி கொள்ளையடித்து தப்பிச் சென்ற கும்பலால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் நவம்பர் 19 அன்று மதியம், இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல், ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யச் சென்ற வாகனத்தை நிறுத்தி, ரூ.7 கோடியை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இன்னோவாவில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் வாகனத்தை நிறுத்தி, ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏடிஎம் வாகனம் விதிகளை மீறியதாகவும் கூறி மிரட்டியது.