மலையாள திரைப்படத் தயாரிப்பாளரும், மிகவும் பாராட்டப்பட்ட ‘த்ரிஷ்யம்’ தொடரின் மூளையாக செயல்பட்டவருமான ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம் 3 படத்தை பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தில் வெளியானாலும், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், சிங்களம் உள்ளிட்ட 16 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.