AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

திருப்பதி திருமலையில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜூன் 3, 2026 இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Jun 2026 21:04 PM IST

திண்டுக்கல், ஜூன் 3 : திருப்பதி கலப்பட நெய் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் ஒர பகுதியாக அமலாக்கத்துறை ஹைதராபாத் மண்டல அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஜூன் 3, 2026 இன்று பல மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகளை நடத்தினர். திண்டுக்கல்லிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

திருப்பதி திருமலையில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜூன் 3, 2026 இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மும்பை, டெல்லி, குண்டூர், பிகானேர், டேராடூன், ரூர்க்கி, அகில்யநகர், திண்டுக்கல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க : எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பில் சோகம்… கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பலி… 3 பேர் பலத்த காயம்

அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்

 

கலப்பட நெய் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான பொமில் ஜெயின், விபின் ஜெயின், ராஜு ராஜசேகரன், ராஜேஷ் மன்சுக்லால் சாவ்தா, அபூர்வ வினயகாந்த் சாவ்தா, மசிந்திர சாந்தாராம் லங்கா, அஜய் குமார் சுகந்த், மகேஷ் குமார், ரோஹிரா, மற்றும் ஆஷிஷ் அகர்வால் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலக வளாகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கலப்பட நெய் விநியோகம் மூலம் பெறப்பட்ட ரூ.45 கோடிக்கும் அதிகமான பணம் அசையா சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. குர்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இருந்த சில சொத்துப் பத்திரங்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோயம்பேட்டில் கார் ஏற்றி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

இந்த சம்பவம் தற்போது  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  திருப்பதி திருமலை தேவஸ்தானம் லட்டு தயாரிப்பிற்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே பரபரப்பை ஏர்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us