AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளம் ஜோடிகளுக்கு குறி.. நிர்வாண வீடியோ மிரட்டல்.. திருவண்ணாமலையை அதிர வைக்கும் பகீர் சம்பவங்கள்!

Tiruvannamalai Women Harassing 8 Arrested : திருவண்ணாமலையில் இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களை ஆபாச படம் எடுத்து நகைகளை பறித்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் ஜோடிகளுக்கு குறி.. நிர்வாண வீடியோ மிரட்டல்.. திருவண்ணாமலையை அதிர வைக்கும் பகீர் சம்பவங்கள்!
திருவண்ணாமலை வன்கொடுமை சம்பவத்தில் கைது
Vinoth V
Vinoth V | Published: 03 Jun 2026 12:06 PM IST

திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் கடந்த 30- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பங்கேற்றிருந்தார். பின்னர், கிரிவலம் முடிந்து இருவரும் பைக்கில் செங்கம் வழியாக தருமபுரிக்கு சென்று கொண்டிருந்தனர். திருவண்ணாமலை அருகே பெரியகோளாப்பாடி பாறை அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம கும்பல் அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி அந்த பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தது. மேலும், அந்த பெண் மற்றும் ஆண் நண்பரை நிர்வாணமாக படம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

ஆபாச படங்களை காட்டி ரூ.1 லட்சம் கேட்பு

பின்னர், மறுநாள் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட கும்பல் ரூ. 1 லட்சம் வேண்டும். இல்லையெனில் உங்களது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளது. இதனால், பயந்துபோன அந்த பெண் ரூ.4 ஆயிரத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண் காவல் உதவி எண்ணான 100 -இல் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன்பேரில், திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!

மற்றொரு பெண்ணிடம் அத்துமீறல்

இதேபோல, கடந்த 31- ஆம் தேதி இரவு திருவண்ணாமலையில் பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வரும் 23 வயது இளம் பெண் வேலை முடிந்து தனது ஆண் நண்பருடன் அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவர்களை காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று இருவரையும் நிர்வாணப்படுத்தி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் 2 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு தப்பி சென்றது.

8 பேரை கைது செய்த 5 தனிப்படைகள்

இதுகுறித்த புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆடையூரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வாசுதேவன், பெரியபாலியப்பட்டை சேர்ந்த ஆகாஷ், அஸ்வநாதசுரனை கிராமத்தை சேர்ந்த அப்பு, அரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தை சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாவாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 8 பேரை போலீசாரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: கோவையில் தனியார் தியேட்டரில் திடீர் கலாட்டா.. பொதுமக்களிடம் உரிமையாளர்கள் – ஊழியர்கள் கடும் வாக்குவாதம்!

Follow Us