AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லஞ்ச புகார்.. 3 போலீசார் சஸ்பெண்ட்… ஒரு காவலர் டிஸ்மிஸ்.. திண்டுக்கல் எஸ்.பி. மாஸ் ஆக்சன்!

Dindigul Policeman Suspend : திண்டுக்கல் மாவட்டத்தல் லஞ்ச புகார் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் 4 காவலர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லஞ்ச புகார்.. 3 போலீசார் சஸ்பெண்ட்… ஒரு காவலர் டிஸ்மிஸ்.. திண்டுக்கல் எஸ்.பி. மாஸ் ஆக்சன்!
திண்டுக்கல்லில் காவலர்கள் சஸ்பெண்ட்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 03 Jun 2026 07:49 AM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சாமிநாதபுரம் காவல் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்கள் உள்பட இரு தரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு தரப்புக்கு போலீசார் சாதகமாக செயல்பட்டதாகவும், அதற்காக லஞ்சம் வாங்கிக் கொண்டு பொய்யான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் கவனத்துக்கு சென்றது. அதன் பேரில், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், டிஎஸ்பி தனஞ்செயன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இரு காவலர்கள் பணியிடை நீக்கம்

இதில், மூன்று காவலர்கள் ஒரு தரப்பினரிடம் இருந்து லஞ்சம் பெற்றதும், அவர்களுக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜூ ( 51 வயது), காவலர் சுதா ராணி ( 42 வயது), ஆகியோரின் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: தமிழக அமைச்சரவையில் முதலிடம் யாருக்கு? அரசு பொதுத்துறை வெளியிட்ட சீனியாரிட்டி பட்டியல்!

ஒழுங்கீனமாக நடந்த காவலர் பணி நீக்கம்

இதனிடையே, அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் மணிகண்டன் (35 வயது). பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் சமர்ப்பித்திருந்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், முதல் நிலை காவலர் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவு பிறப்பித்தார்.

உதவி ஆய்வாளர் கட்டாய ஓய்வில் இருக்க உத்தரவு

மேலும், ஒட்டன்சத்திரம் வட்டம், அம்பிளிக்கை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த லியோனி ரஞ்சித் குமார் முன்னதாக திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது லஞ்சம் பெற்றதாக புகார் இருந்து வந்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித் குமாரை கட்டாய ஓய்வில் இருக்குமாறு எஸ். பி. பிரதீப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த அதிரடி சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!

Follow Us