AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டு நாளில் ரூ. 2000 வரை உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold and Silver Price: கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 2,000 ரூபாய் உயர்ந்துள்ளது. ஜூலை 23ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் 1,08,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு நாளில் ரூ. 2000 வரை உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jul 2026 11:44 AM IST

ஜூலை 23, 2026: தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஜூலை 23ஆம் தேதியான இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 70 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 22ஆம் தேதியைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 210 ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. அதே சமயத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,680 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சூழலில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை:

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 2,000 ரூபாய் உயர்ந்துள்ளது. ஜூலை 23ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் 1,08,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் 14,727 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,816 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: மீண்டும் 4,000 டாலர்களை கடந்த தங்கம்.. கடும் விலை உயர்வை எதிர்க்கொள்ள போகும் இந்தியா?

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், ஜூலை 23ஆம் தேதியான இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு – காரணம் என்ன?

கடந்த இரண்டு மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. வங்கியின் வட்டி விகிதம் தங்கத்தின் விலையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது அடுத்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow Us