ஜூலை 31-க்கு இதனை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கட்.. ரேஷன் கார்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Important Announcement For Ration Card Users | வறுமை கோட்டின் கீழ் உள்ள இந்திய குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாக ரேஷன் கார்டு விளங்குகிறது. இந்த நிலையில், ஜூலை 31, 2026-க்குள் ரேஷன் கார்டில் இதனை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய குடும்பங்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு (Ration Card) உள்ளது. அதிலும் குறிப்பாக வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் முக்கிய அம்சமாகவும் ரேஷன் கார்டு விளங்குகிறது. இந்த சூழலில் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது, ரேஷன் கார்டை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த நிலையில் தான், ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஜூலை 31, 2026-க்குள் ரேஷன் கார்டில் இந்த விஷயத்தை செய்து முடிக்கவில்லை என்றால், ரேஷன் கார்டை பயன்படுத்தி அரிசி வாங்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு குறித்து வெளியான அந்த முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர்ந்து இலவச அரிசி பெற இகேஒய்சி கட்டாயம்
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட கூடிய ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் மானிய விலையில் எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அரிசி மற்றும் மானிய விலை உணவு பொருட்களை அடுத்த அடுத்த மாதங்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்றால், பயனர்கள் தங்களது ரேஷன் கார்டில் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : மாதம் ரூ.16,000 பென்ஷனாக பெறலாம்.. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ரேஷன் கார்டுக்கு இகேஒய்சி ஏன் கட்டாயம்?
அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இலவச அரிசி மற்றும் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சமீப காலமாக ரேஷன் கார்டில் பல வகையான மோசடிகள் நடைபெறுவதாகவும், தகுதியற்றவர்கள் இலவச அரிசி உள்ளிட்ட சலுகளைகளை பெறுவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், தகுதியற்றவர்கள் இந்த சலுகைகளை பெறுவதை தடுக்க அரசு இந்த கேஒய்சி திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதையும் படிங்க : இனி தட்கல் டிக்கெட்டை ஏஐ மூலம் உறுதி செய்யலாம்.. IRCTC இணையதளத்தில் அட்டகாசமான அம்சம்!
அதாவது, ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைரேகையை ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால் அந்த குடும்பத்திற்கு இலவச ரேஷன் அரிசி வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடையில் தொடர்ந்து இலவச அரிசிம் பெற வேண்டும் என்றால் ரேஷன் கடைகளுக்கு சென்று உங்களது குடும்ப உறுப்பினர்களிம் கைரேகையை பதிவு செய்யுங்கள். இதேபோல, இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்கம் செய்வதும் அவசியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.