AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மகளிருக்கு மாதம் ₹2,500!”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

TVK Budget August 5: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“மகளிருக்கு மாதம் ₹2,500!”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jul 2026 13:38 PM IST

சென்னை, ஜூலை 22: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பெண்களுக்கான ‘மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500’ திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகள் இந்த முதல் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

இதையும் படிக்க: Gold Price : ரூ.9,000 சரிவை சந்தித்த தங்கம்.. தற்போது முதலீடு செய்வது சரியானதா?

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500:

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றுத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், இந்த ரூ.2,500 உரிமைத்தொகை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்:

இந்நிலையில், 2026–27-ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடத்தப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.

இதையும் படிக்க: எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் ஏன் காப்பீட்டு தொகை அதிகம்? காரணம் இதுதான்!

வாக்குறுதிகள் நிறைவேறுமா?

தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம்பெறக் கூடும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இத்திட்டம் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்குப் பூர்த்தி செய்யப் போகிறது என்பது ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே முழுமையாகத் தெரியவரும்.

Follow Us