AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ரூ. 1000 வரை சரிந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Price In Chennai: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,431-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,448-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ரூ. 1000 வரை சரிந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Sep 2026 10:31 AM IST

செப்டம்பர் 9, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதியான இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,431-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,448-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: முதலீடு செய்யும் பிளானா?.. அப்போ இந்த அடிப்படை விதிகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?

ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல், உலக பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அதேபோல், முதலீட்டாளர்களின் கவனம் அவ்வப்போது தங்கத்தின் மீது திரும்புவதாலும், சில நாட்களில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மேலும், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இத உடனே செக் பண்ணுங்க!

இதனிடையே, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது சரியான காலமாக இருக்கலாம் என்றும், 2026ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகவும் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. அதன்பிறகு, இதுவரை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us