FASTag-ல் கிடைக்கும் ரூ.1,000 இலவச ரீச்சார்ஜ்.. அட இது உங்களுக்கு தெரியாதா?.. உடனே பரிசை வெள்ளுங்கள்!
1,000 Rupees Free FASTag Recharge | இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் பொதுமக்களுக்கு ரூ.1,000 ஃபாஸ்டேக் இலவச ரீச்சார் வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்களிடம், அந்த நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சுங்கச்சாவாடிகள் அமைக்கப்பட்டு, அதன் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும். முன்னதாக கையில் பணம் கொடுத்து பயணிகள் சுங்க கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஃபாஸ்டேக் முறை அமலில் உள்ளது. இதன் மூலம், சுங்கச்சாசடிகளை கடந்துச் செல்லும்போது தானாகவே பணம் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த நிலையில் தான், அடிக்கடி சுங்கச்சாவடிகளை கடந்துச் செல்லும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், ஃபாஸ்டேக் வழங்கும் ரூ.1,000 பரிசு. அது என்ன பரிசு, அதனை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
NHAI கொண்டுவந்த அசத்தல் திட்டம் – என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அந்த நிறுவனங்கள் அதற்கு ஏற்ற சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது பொதுமக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளதுதான் கழிப்பறைகள். கழிப்பறை பற்றாக்குறை அல்லது அவை சுத்தமில்லாமல் இருப்பதுதான் பெரும்பாலான்வர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.
இதையும் படிங்க : Gold Loan : ஓரங்கட்டப்படும் தனிநபர் கடன்.. அதிகரிக்கும் தங்கக் நகை கடன்.. காரணம் என்ன?
இந்த நிலையில் தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில், சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் அசுத்தமாக இருக்கிறது அல்லது முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால் அதனை புகைப்படம் எடுத்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பதால் கழிப்பறைகள் முறையாக பரமரிக்கப்படுவது மட்டுமன்றி, அந்த புகைப்படத்திற்கு ரூ.1,000 பரிசும் வழங்கப்படும். இந்த திட்டன் Clean Toilet Picture Challenge-க் கீழ் செயல்படுகிறது.
ஜூன், 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ள திட்டம்
இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜூன் 30, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் புகைப்படம் எடுத்து புகார் அளித்தால் ரூ.1,000 ஃபாஸ்டேக் ரீச்சார்ஜ் பரிசை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.