AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!

Frozen Screen UPI Scam | தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், "Frozen Screen UPI Scam" என்ற புதிய மோசடி ஒன்று பரவலாக அதிகரித்து வருகிறது.

அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Sep 2026 12:35 PM IST

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி மற்றும் குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக புதிய புதிய வடிவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது ஏராளமான மக்கள் இரையாவது இந்த ஃப்ரோசன் ஸ்கிரீன் யுபிஐ ஸ்கேமுக்கு (Frozen Screen UPI Scam) தான். இது என்ன மோசடி, இதன் மூலம் பொதுமக்களின் பணம் திருடப்படுவது எப்படி, இதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

“Frozen Screen UPI Scam” என்றால் என்ன?

நாம் ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தும்போதோ அல்லது இணையதளத்தை பயன்படுத்தும்போதோ அவை செயல்படாமல் அப்படியே நிர்பது வழக்கமாக ஒன்றுதான். நெட்வொர்க் சிக்கல் உள்ளிட்டவை இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இதனை மோசடி செய்யும் யுக்தியாக பயன்படுத்திகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான், சமீப காலமாக இந்த வகையான மோசடிகள் அதிகரித்துள்ளது. இது Frozen Screen UPI Scam என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய லேப்டாப் போதும்! 16GB RAM, 1TB சேமிப்பு வழங்கும் ஜியோபிசி

“Frozen Screen UPI Scam” எப்படி நடைபெறுகிறது?

அதாவது, மோசடிக்காரர்கள் போலியான சிக்கல்களை உருவாக்குவார்கள். விளம்பரம் அல்லது வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, அந்த நபரின் மொபைல் போனிலோ, வங்கி செயலிகள் அல்லது யுபிஐ செயலிகளில் சிக்கல் உள்ளதாக நம்ப வைப்பார்கள். அதனை நம்பி டார்கெட் செய்யப்படும் நபர் நடந்துக்கொண்டால் ரிவார்டு க்ளெய்ம் செய்ய ஏபிகே ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறுவார்கள்.

இதையும் படிங்க : நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?

அதனையும் நம்பி டார்கெட் செய்யப்பட்ட நபர், பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் அதன் மூலம் ஓடிபி திருடுவது, அந்த நபரின் ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் எடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து அவரது தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை திருடி மோசடியில் ஈடுபடுவர். இவ்வாறு தான் இந்த Frozen Screen UPI Scam நடைபெறும்.

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக உங்களது மொபைல் போனிலோ அல்லது செயலிகளிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் கஸ்டமர் கேரில் இருந்து உங்களை தொடர்ப்புக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் உங்களது சிக்கலை அந்த உரிய நிறுவனத்திடம் முறையாக தெரிவித்தால் மட்டுமே, நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உங்களுக்கு இத்தகைய போன் கால்கள் ஏதேனும் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இதனை யோசிக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us