AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?

WhatsApp Bans 53 Lakh Accounts : இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் கணக்குகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2026 18:30 PM IST

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் கணக்குகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் +91 என தொடங்குகின்ற மொபைல் எண்களை கொண்ட 53,64,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முடக்கப்பட்ட கணக்குகளில், 17,90,800 கணக்குகள் எந்த புகாரையும் பெறப்படாமலேயே முடக்கப்பட்டுள்ளன. பொதுவாக வாட்ஸ்அப் கணக்குகள் குறித்து பயனர்களிடம் புகார் வந்தால், அது குறித்து விசாரிக்கப்பட்டு பின்பு நடவடிக்கைப்படும். ஆனால் இந்த முறை புகார் பெறப்படுவதற்கு முன்பே அதில் தவறான செயல்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : 16 வயதில் AI Start Up.. தந்தைக்கே வேலை கொடுத்த சிறுவன்.. வியக்க வைக்கும் கேரளா சிறுவன்!

குறிப்பா மோசடி, ஏமாற்றுதல், தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட விதிமீறல்களை தானாகவே கண்டறியும் வகையில் வாட்ஸ்அப் ஒரு ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. கணக்கு பதிவு செய்யப்படும் நேரம் முதல், மெசேஜ் அனுப்புவது, பயனர்களின் ரிப்போர்ட், பிளாக் செய்யப்படும் கணக்குகள் ஆகியவ பல்வேறு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

19,000க்கும் மேற்பட்ட புகார்கள்

இதற்கிடையே, கடந்த 2026, ஜூலை மாதத்தில் இந்திய பயனர்களிடமிருந்து வாட்ஸ்அப்க்கு 19,112 புகார்கள் வந்துள்ளன. இதில் 9,877 பேர் தங்களது கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்று தெரியாமல், கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் 107 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிற உதவிகள் தொடர்பாக 8,704 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் 369 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனர்களின் புகார்களின் அடிப்படையில் மட்டும் மொத்தம் 476 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!

மேலும், ஜூலை மாதத்தில் அரசின் புகார் மேல்முறையீட்டு குழு என்ற அமைப்பிடமிருந்து 25 உத்தரவுகள் வாட்ஸ்அப்க்கு கிடைத்துள்ளன. இந்த 25 உத்தரவுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் முடக்கப்பட்ட 53.64 லட்சம் கணக்குகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கணக்குகள், பயனர்களிடமிருந்து புகார் வருவதற்கு முன்பே வாட்ஸ்அப்பால் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், விதிமீறல் மற்றும் மோசடி நடவடிக்கைகளை புகார் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் வாட்ஸ்அப் அதிக கவனம் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது.

Follow Us