அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான விவோ டி5.. அதுவும் பட்ஜெட் ரகத்தில்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்!
Vivo T5 Smartphone Introduced In India | விவோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான விவோ டி5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் விவோ (Vivo). இந்த நிறுவனம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதன் காரணமாக ஏராளமான பயனர்கள் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். மக்கள் மத்தியில் விவோ ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ டி5 ஸ்மார்ட்போனை (Vivo T5 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவோ டி5 ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த விவோ டி5 ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் 1.5K Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7,050 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அது 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 மணி நேரம் பாடல் கேட்பது, 34.7 மணி நேரம் வீடியோ பார்ப்பது, 7.9 மணி நேரம் கேம் விளையாடுவது ஆகியவற்றை செய்ய முடியும்.




இதையும் படிங்க : யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும்போது இவை குறித்து கவனம் தேவை.. ஆர்பிஐ கூறும் முக்கிய அறிவுரை!
விவோ டி5 ஸ்மார்ட்போன் – விலை பட்டியல் என்ன?
Unboxing the vivo T5.
A sleek design, powerful performance, and a big battery packed into a value-focused smartphone. But is this the new all-rounder to beat? 👀
Watch our first look and stay tuned for the full review! #vivoT5 #vivo #Unboxing #Smartphone #TechReels… pic.twitter.com/38HAnoYkOv
— mysmartprice (@mysmartprice) September 3, 2026
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு அறிமுகமாகியுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.44,999-க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.49,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.