AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. முழு விவரம் இதோ!

Samsung Galaxy S26 FE Smartphone Introduced | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் எஸ்26 எஃப்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. முழு விவரம் இதோ!
சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Aug 2026 17:38 PM IST

இந்தியாவில் ஆப்பிள் (Apple) ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக சாம்சங் (Samsung) உள்ளது. இந்த நிறுவனம் காலத்திற்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை கொண்ட பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ ஸ்மார்ட்போனை (Samsung Galaxy S26 FE) உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் Full HD + Dynamic AMOLED 2X டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Exynos 2500 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 3nm பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 128 ஜிபி முதல் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரூ.2,000-க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. விரைவில் வருகிறது MDR கட்டண முறை!

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட் அப் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் டெலிபோட்டோ கேமரா 3எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் 30எக்ஸ் டிஜிட்டல் சூம் அம்சத்தை கொண்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.89,000-க்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவே 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,00,000-க்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,22,000-க்கு விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us