ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் இந்தியாவில் அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?
Oppo Find X10 & X10 Pro India | ஓப்போ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ (Oppo) நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ஸ்மார்ட்போன் (Oppo Find X10 Smartphone) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன் (Oppo Find X10 Pro Smartphone) ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒப்போ அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்கள்
ஓப்போ நிறுவனம் தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் போன ஓப்போ தற்போது தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 200 மெகாபிக்சல் ரியர் கேமராக்கல், 8,000 mAh பேட்டரி உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளன.




இதையும் படிங்க : ஐபோன் டுயோவுக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி.. Note செய்ய வேண்டிய சில விஷயங்களும் உள்ளன!
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Everything you need to know about the OPPO Find X10 ✨
#OPPOFindX10Series https://t.co/VYjoSexyAW
— OPPO (@oppo) October 21, 2026
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ஃப ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே, 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,69,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உலகின் முதல் பறக்கும் கார்.. ரோட்ஸ்டர் காரை அறிமுகம் செய்த டெஸ்லா!
இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஓப்போ எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,99,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்களுகு இந்தியாவில் அக்டோபர் 29, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.