AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐபோன் டுயோவுக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி.. Note செய்ய வேண்டிய சில விஷயங்களும் உள்ளன!

Apple Announces Huge Discount For Apple Duo | ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது அந்த ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அது என்ன தள்ளுபடி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் டுயோவுக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி.. Note செய்ய வேண்டிய சில விஷயங்களும் உள்ளன!
ஐபோன் டுயோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2026 13:54 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன்களுக்கு (iPhones) தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஆப்பிள், எந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தாலும், அதனை உடனடியாக சென்று வாங்கும் அளவுக்கு ஆப்பிள் மீது பலரும் தீராத பற்று கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான், ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 18 Series Smartphones) அறிமுகம் செய்தது. அதில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அதாவது தனது முதல் மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐபோன் 18 ஃபோல்டு ஸ்மார்ட்போனை (Apple iPhone 18 Fold Smartphone) அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் ஐபோன் டுயோவையும் (Apple iPhone Duo) அறிமுகம் செய்தது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது தனது ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனுக்கு ஆப்பிள் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : காணாமல் போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எப்படி?.. Google Find My Hub இருந்தால் போதும்!

ஐபோன் டுயோவுக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி

ஆப்பிள் நிறுவனம் தனது பழைய மாடல் ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ் செய்ய அசத்தல் சலுகைகளை வழங்குகிறது.

ஐபோன் மாடல்கள்  எக்ஸ்சேஞ் மதிப்பு 
ஐபோன் 16 பிளஸ் ரூ.40,000
ஐபோன் 17 ரூ.45,000
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.62,000
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ.71,000

இதையும் படிங்க : No என ரிப்ளை செய்தால் பணம் போயிடும்.. வாட்ஸ்அப்பில் உருவெடுத்துள்ள புதிய மோசடி!

பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றி, புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க வழிவகை செய்யும் வகையில் இந்த தள்ளுபடிகளை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது மேலோட்டமான தள்ளுபடி விவரம் ஆகும். ஐபோன்களின் தரத்தை பொறுத்து அதற்கு வழங்கப்படும் இறுதி மதிப்பு மாறும். எனவே, ரூ.3 லட்சம் மதிப்பிலான இந்த ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனை, பழைய ஐபோன்களை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் நல்ல விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us