AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டுக்கு சிறந்த ஏசியை தேர்வு செய்வது எப்படி?.. இவை தான் முக்கியம்!

Guide to Choosing the Right Air Conditioner | புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏசி இல்லாமல் இருப்பதே கடினமாக உள்ளது. இந்த நிலையில், உங்கள் வீட்டுக்கு சிறந்த ஏசியை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

வீட்டுக்கு சிறந்த ஏசியை தேர்வு செய்வது எப்படி?.. இவை தான் முக்கியம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Oct 2026 15:19 PM IST

இந்தியவில் கோடைக்காலத்தில் அதிக அளவு வெப்பம் நிலவும், அப்போது ஏசி (AC – Air Conditioner) இல்லாமல் இருப்பதே கடினமாக இருக்கும். ஆனால், தற்போது கோடைக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகியும், இன்னும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதற்கு எல்நினோ (EL Nino) முக்கிய காரணியாக உள்ளது. இந்த எல்நினோ காரணமாக இனி வரும் காலங்களில் மேலும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, இனி வரும் கோடைக்காலங்களை ஏசி உள்ளிட்டவை இல்லாமல் சமாளிக்க முடியாது. இந்த நிலையில், உங்கள் வீட்டுக்கு சிறந்த ஏசியை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டுக்கு சிறந்த ஏசியை தேர்வு செய்வது எப்படி?

ஏசியில் பல்வேறு வகைகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவை மற்றும் பயன்பாட்டை கொண்டுள்ளன. ஒவ்வொரு ஏசியும் நீங்கள் ஏசியை பொருத்த தேர்வு செய்யும் அறையின் அளவு, கால சூழல், அதற்கு தேவையாக ஆற்றல் ஆகியவற்றை பொருத்து செயல்படும். எனவே, உங்களது தேவைகளை முதலில் தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப ஏசியை தேர்வு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

அறையின் அளவுக்கு ஏற்ப ஏசி வாங்குதல்

அறையின் அளவு தான் அந்த அறை எவ்வளவு நேரத்தில் குளிராகும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக உள்ளது. குறிப்பாக சிறிய அறைகளுக்கு உறுதியான யுனிட் தேவைப்படாது, இதுவே பெரிய அறை என்றால் அதற்கு அதிக ஆற்றல் கொண்ட இயந்திரம் மிக அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : ஆன்லைன் ஸ்டேட்டஸ்… பிறந்தநாள் நினைவூட்டல் – வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய கான்டாக்ட் டேப் வசதி

ஏசி டன்னை சரியாக தேர்வு செய்வது ஏன் அவசியம்?

ஏசி டன் அதன் கூலிங் அம்சத்தை உறுதி செய்யும். அதாவது, அந்த ஏசி எவ்வளவு வெப்பத்தை அறையில் இருந்து வெளியேற்றும் என்பதுதான் அதற்கு அர்த்தம். அதாவது குறைந்த டன் ஏசியை சிறிய அளவு கொண்ட அறையில் பொருத்தும்போது அது மிக விரைவாக அந்த அறையை குளிர செய்யும். இதுவே ஒரு பெரிய அறையில் குறைந்த டன் கொண்ட ஏசியை பொருத்தினோம் என்றால் அது அறையை குளிர செய்ய கடும் சவால்களை எதிர்க்கொள்ளும்.

Follow Us