AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் டெலிகாம் நிறுவனங்கள்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!

Jio, Airtel, Vodafone Idea Recharge Price Hike | இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் டெலிகாம் நிறுவனங்கள்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Oct 2026 22:22 PM IST

இந்திய தொலைத்தொடர்பு (Telecom) சந்தையில் மிகப்பெரிய நிறுவனங்களாக ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அவ்வப்போது தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும். அந்த வகையில் தான், தற்போது இந்த நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களின் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் டெலிகாம் நிறுவனங்கள்

புகழ்பெற்ற Centrum Institutional Research வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிரடியாக உயர்த்த உள்ளன என கூறப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த 4 முதல் 5 மாதங்களில் இந்த நிறுவனங்கள் தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த விலை உயர்வுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. நத்திங் 4a, 4a Pro மற்றும் 4b ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

4 முதல் 5 மாதங்களுக்குள் அமலுக்கு வரும் கட்டண உயர்வு

இந்த கட்டண உயர்வு அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் அமலுக்கு வரும் என அந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த கட்டண உயர்வின் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வருமானம் 0.8 சதவீதம் முதல் 2.0 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ChatGPT-ல் வந்த Try On Clothes அம்சம்.. இனி ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் சுலபம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காலாண்டு அடிப்படையில் சுமார் 8 மில்லியன் புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதன் காரணமாக மொத்த பயனர்களின் எண்ணிக்கை 541 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வருமானம் ரூ.218 ஆக உயரும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us