ChatGPT-ல் வந்த Try On Clothes அம்சம்.. இனி ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் சுலபம்!
Try On Clothes Virtually Feature In ChatGPT | சாட்ஜிபிடியில் புதிய புதிய அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆன்லைன் ஷாப்பிங்கை எளிமையாக்கும் வகையில் Try On Clothes Virtually அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த உலகையுமே செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் தனது கையில் வைத்துள்ளது. தொழில்நுட்பத்துறை முதல், கல்வி, உணவு என பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் உள்ளது. அதுமட்டுமன்றி, மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏஐ பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான், மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு தேவையான முக்கிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆன்லைன் ஷாப்பிங்கை (Online Shopping) எளிமையாக்கும் புதிய அம்சம் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கை எளிமையாக்கும் அசத்தல் அம்சம்
ஓபன் ஏஐ-ன் சாட்ஜிபிடி செயலியை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், ஆன்லைன் ஷாப்பிங்கை எளிமையாக மாற்றும் வகையில், புதிய அம்சத்தை ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, “Try On Clothes Virtually” என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பார்க்கும் உடைகளை, அவை நமக்கு எப்படி இருக்கும் என ஏஐ மூலம் சோதனை செய்து தேர்வு செய்துக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு.. ரூ.10,000 சைபர் மோசடி பாதுகாப்பு – பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்




இந்த அம்சம் எப்படி செயல்படும்?
இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த உங்களது முழு உருவ படத்தை நீங்கள் சாட்ஜிபிடியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் எந்த உடை அல்லது ஆபரணத்தை முயற்சி செய்து பார்க்க உள்ளீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு பிறகு, அந்த உடையோ அல்லது ஆபரணமோ உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை சாட்ஜிபிடி உங்களுக்கு தெளிவாக காட்டும்.
இதையும் படிங்க : கிரியேட்டர்களுக்கு குட்நியூஸ்.. இன்ஸ்டாகிராம் கொண்டுவந்த சூப்பர் அடடேட்… புதிய AI டூல்
சாட்ஜிபிடியில் உள்ள ChatGPT Shopping Results பகுதியில் உள்ள Try On என்ற ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் இந்த சோதனை மேற்கொண்டு உங்களுக்கு எந்த உடை சரியாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.